search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பலி"

    • குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (40). இவரது ஒரே மகள் இபான் நசீரா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் தந்தை சையது முஸ்தபா மற்றும் மகள் இபான் நசீரா உள்ளிட்ட இருவரும் குர்பானி கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டு அன்னூர் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அன்னூர் சாலையில் டேங்குமேடு பகுதியில் இருந்து நேசனல் பள்ளி வழியாக கரட்டுமேடு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டரை சையது முஸ்தபா முந்த முயன்றுள்ளார்.

    அப்போது,திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் தந்தை மற்றும் மகள் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

    இதில் டிராக்டரின் பின்சக்கரத்தில் இபான் நசீரா சிக்கி கொண்ட நிலையில் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.தந்தை சையது முஸ்தபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சவுமியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வளசரவாக்கம். எஸ்.வி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சவுமியா (வயது17). பிளஸ்-2 முடித்து உள்ள இவர் கல்லூரியில் சேர இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10மணி அளவில் சவுமியா, காற்று வாங்குவதற்காக வீட்டின் 2-வது மாடிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த பக்கவாட்டு கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.

    அப்போது நிலை தடுமாறிய சவுமியா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள்கள் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சவுமியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மதுரை:

    சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அபிநந்தனா(வயது15). 10-ம் வகுப்பு மாணவி. கூடைப் பந்து வீராங்கனையான அபிநந்தனா விருதுநகரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 15-ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலில் விருதுநகர் வந்துள்ளார்.

    அவருடன் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த போதிலும் முழுமையாக குணமடையவில்லை.மேலும் அவரால் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்ற முடியவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் நடைபெற்ற போட்டிகள் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் 4 பயிற்சியாளர்கள் மற்றும் 24 மாணவ-மாணவிகளுடன் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு இன்று பஸ்சில் வந்துள்ளார். பின்னர் திருமங்கலத்தில் இருந்து பஸ்சில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் மதுரை ரெயில் நிலையத்திற்கு அபிநந்தனா சென்றார்.

    அவர்கள் சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர்.

    இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார்.
    • பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கமால். இவர் கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் லவ்லி(வயது11). கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார். அப்போது அதன் கயிறு மாணவியின் கழுத்தை இறுக்கி அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லவ்லி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சதுரங்க பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது.

    காட்டாங்கொளத்தூர்:

    காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் தாமரை செல்வி.

    எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவியான இவர் காட்டாங்கொளத்தூரில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், மாணவி தாமரைச் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் தாமரை செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது. அரியானாவை சேர்ந்த இவர் அப்பகுதியில் தங்கி இருந்து என்ஜினீயரிங் படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.
    • செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் சைமன் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் ஷெர்லி (வயது 15). இவர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ஷெர்லி பள்ளி முடிந்ததும், டியூசன் வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அவர் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான மாணவி ஷெர்லியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்படடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார்.
    • டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகள் மீனாசுந்தரி (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில். படித்து வந்தார்.

    தினமும் தனது கிராமத்தில் இருந்து அவர் காடவராயன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பின்னர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகவும் குறுகிய சாலையாக இருந்தததால் குறிப்பிட்ட தூரம் வரை டிராக்டரை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் அதனையும மீறி கனகராஜ் அந்த டிராக்டரை முந்த முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார். ஆனால் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். இதைப்பார்த்த அவரது அண்ணன் கனகராஜ் கதறி அழுதார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி மீனாசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவி பலியானதையடுத்து முதுகுளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • திருமங்கலம் அருகே வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
    • அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாத்தங்குடியை சேர்ந்தவர் பூமிராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவரும் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தென்னரசு (20) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.கல்லுப்பட்டி சென்று விட்டு மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தனர்.

    அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவி மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாணவி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த தென்னரசு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினார்.

    இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை பூமிராஜா திருமங்கலம் தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில், தனது மகளை தென்னரசு கடத்தி சென்றபோது அவர் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசை கைது செய்தனர்.

    • இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள போஜனம்பட்டி ஏ.வி. பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துராணி. தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் மகளான தவதர்ஷிணி (வயது 13) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர். தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

    சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடேறி விட்டதா என்பதை பார்க்க கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தவதர்ஷிணி படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும்.
    • பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    தாம்பரம்:

    நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொழிச்சலூர் அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ்மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    தாம்பரம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ(வயது17). சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடந்த விழாவில் லட்சுமி ஸ்ரீ பங்கேற்க சைக்கிளில் வந்தார். அவர் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

    விழா முடிந்ததும் காலை 11 மணியளவில் மாணவி லட்சுமி ஸ்ரீ வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார்.

    அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்(எண்52எச்) திடீரென முன்னால் சென்ற மாணவி லட்சுமிஸ்ரீயின் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய லட்சுமிஸ்ரீ சைக்கிளோடு கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ்மோதி மாணவி பலியானது பற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்தில் மாணவி பலியாகி விட்டதாக குற்றம் சாட்டினர்.

    போலீசாரின் சமாதான பேச்சுவார்தைக்கு பின்னர் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பலியான மாணவி லட்சுமிஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுதந்திரதின விழா முடிந்ததும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது பள்ளி தோழியான மற்றொரு மாணவியுடன் தனித்தனியாக சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரத்தில் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    பல்வேறு ஆசை, எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவியின் வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து போனது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

    மாணவி லட்சுமிஸ்ரீ பலியானது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியான சம்பவம் அவருடன் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக மாணவிகள் மற்றும் பள்ளி தோழிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×